கொழும்பு கோட்டை பெஸ்டியன் மாவத்தையில் அமைந்துள்ள தனியார் பேருந்து நிலையத்தை போக்குவரத்து கேந்திர நிலையமாக மாற்றியமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ, மின்வலு மற்றும் வலுசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.
அதனை அபிவிருத்தி செய்யும் பணிகள் அடுத்த ஆண்டு முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பயணிகள் போக்குவரத்துக்கு பொருத்தமற்ற பேருந்துகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இருக்கைகள் சிதைவடைந்துள்ள பேருந்துகளின் இருக்கைகளை ஒருவார காலத்திற்குள் திருத்த வேண்டும் எனவும் போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

