கொழும்பு சிறைச்சாலைக்கு மேலே பறந்த ட்ரோன் கமெரா

300 0

கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலைக்கு மேலே பறந்த ட்ரோன் கமெராவை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

இன்று (திங்கட்கிழமை) காலை 6 மணியளவில் சிறைச்சாலைக்கு மேலே  குறித்த ட்ரோன் கமெரா பறந்ததாகவும் அது சிறிது நேரத்தின் பின்னர் விபத்திற்குள்ளானதாகவும் கூறப்படுகின்றது.

மேலும் சிறைச்சாலையின் பி பிரிவின் அருகே ட்ரோன் விபத்துக்குள்ளானதாக சிறை  தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் அனுமதியின்றி பறக்கவிடப்பட்ட ட்ரோனை கைப்பற்றிய பொலிஸார், அது தொடர்பாக விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.