தங்கம் விலை பவுனுக்கு ரூ.224 குறைவு

330 0

தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.224 குறைந்து ரூ.28,896-க்கு விற்பனை செய்யப் பட்டது.

சர்வதேச அளவில் தங்கத்தின் தேவை குறைவு மற்றும் பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் தங்கம் விலையும் நேற்று குறைந்தது. சென்னையில் 22 கேரட் தங்கம் பவுனுக்கு ரூ.224 குறைந்து ரூ.28,896-க்கு விற்கப் பட்டது. 22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.3,612-க்கு விற் பனை ஆனது. இதுவே, நேற்று முன்தினம் ரூ.3,640க்கு விற்கப்பட் டது. இது தொடர்பாக சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க பொதுச் செயலாளர் எஸ்.சாந்தகுமார் கூறுகையில், ‘‘இந்தியா மட்டுமல்ல சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் மந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், சர்வதேச அளவில் தங்கத்தின் விலை கணிசமாக குறைந்துள்ள தால், உள்ளூரிலும் தங்கம் விலை குறைந்து வருகிறது’’ என்றார்.