உள்ளாட்சித் தேர்தல் குறித்து 2-வது நாளாக கூட்டணி கட்சிகளுடன் அதிமுக ஆலோசனை: ஓபிஎஸ், ஈபிஎஸ் பங்கேற்பு

306 0

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக முதல்வர் பழனிசாமி, துணை முதல் வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரு டன் சமக தலைவர் சரத்குமார், பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் உள் ளிட்ட தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப் பட்ட 9 மாவட்டங்கள் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகள் இல்லாத சென்னை மாவட்டம் தவிர்த்து, மற்ற 27 மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, உள்ளாட்சித் தேர் தல் தொடர்பாக அதிமுக மாவட் டச் செயலாளர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப் பாளர் முதல்வர் கே.பழனிசாமி தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது. கூட்டம் தொடங்கும் முன்பு, பாஜக, தேமுதிக, பாமக, தமாகா உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகி கள் அதிமுக தலைமை அலுவலகத் துக்கு வந்து தேர்தல் குறித்து ஆலோ சனை நடத்தினர். அப்போது, தொகுதி பங்கீடு குறித்து பேச வில்லை. எப்படி தேர்தலில் வெற்றி பெறுவது என்பது குறித்து மட்டுமே பேசியதாக தெரிவித்தனர்.

இந்நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்துக்கு முதல் வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேற்று மாலை வந்தனர்.

இதைத் தொடர்ந்து, கூட்டணி கட்சிகளான சமக தலைவர் சரத் குமார், பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தன பாலன், மூவேந்தர் முன்னணிக் கழக நிர்வாகி பிரபு உள்ளிட்டோர் அதிமுக அலுவலகம் வந்தனர். உள்ளாட்சித் தேர்தல் குறித்து அதிமுக ஒருங் கிணைப்பாளர்களுடன் அவர்கள் ஆலோசனை நடத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் சமக தலைவர் சரத்குமார் கூறும் போது, ‘‘உள்ளாட்சித் தேர்தலில் நாங்கள் போட்டியிட விரும்பும் இடங்கள் பட்டியலை கொடுத்துள் ளோம். கேட்டதை கொடுப்பார்கள் என்று நம்புகிறோம். தமிழகத்தில் நடக்கும் சிறப்பான ஆட்சி மற்றும் திட்டங்கள் குறித்து மக்களிடம் கூறி வாக்கு சேகரிப்போம்’’ என்றார்.

பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் கூறும் போது, ‘‘போட்டியிட விரும்பும் இடங்கள் குறித்த பட்டியலை கேட் டுள்ளனர். நாளை அளிக்க உள் ளோம்’’ என்றார்.

மூவேந்தர் முன்னணிக் கழக நிர்வாகி பிரபு கூறியபோது, ‘‘முன் னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த போது எங்களுக்கு அளித்த இடங் களை தற்போதும் ஒதுக்க வேண் டும் என்று கேட்டுள்ளோம். ஒதுக்கு வதாக கூறியுள்ளனர்’’ என்றார்.

இதைத் தொடர்ந்து, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் போட்டி யிடும் இடங்கள் தொடர்பாகவும், ஊரக உள்ளாட்சிப் பதவிகளில் கட்சி சார்ந்த பதவிகளை பிரித் துக்கொள்வது குறித்தும் அரசியல் கட்சிகளுடன் அடுத்த கட்டமாக பேச்சு நடத்தப்பட உள்ளதாக அதி முக வட்டாரங்கள் தெரிவித்தன.

பேச்சுவார்த்தை குறித்து அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன் கூறும்போது, ‘‘உள்ளாட்சித் தேர்தல் தொடர் பாக கூட்டணிக் கட்சிகளுடன் முதல் கட்ட பேச்சுவார்த்தை நடந்துள் ளது. அவர்கள் போட்டியிட விரும் பும் இடங்கள் குறித்த பட்டியலை கேட்டுப் பெற்றுள்ளோம். அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகளில் இடங் கள் இறுதி செய்யப்படும்’’ என்றார்.