காங்கயம் அருகே இந்திய பாஸ்போர்ட்டுடன் வங்கதேச நாட்டினர் இருவர் கைது

345 0

இந்திய பாஸ்போர்ட்டுடன் காங்க யம் அருகே முறைகேடாக தங்கி யிருந்த வங்கதேச நாட்டைச் சேர்ந்த 2 பேரை போலீஸார் கைது செய்த னர்.

இதுதொடர்பாக போலீஸார் கூறியதாவது: திருப்பூர் மாவட் டம் காங்கயம் அருகே படியூரில் முகமது கமால்கான் (26) (எ) ரிப் பன் மண்டல், அவரது நண்பர் ரசாக் கான் (26) ஆகியோர் வசித்து வந்த னர். இவர்கள், மேற்குவங்கத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறி, அவிநாசி பாளையம் பகுதியிலுள்ள பின்ன லாடை நிறுவனத்தில் ஓராண்டாக பணிபுரிந்து வந்தனர். இந்நிலை யில், இருவரும் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, நேற்று முன் தினம் காங்கயம் போலீஸார் அவர் களிடம் விசாரணை நடத்தினர். 10 ஆண்டுகளுக்கு முன்பே, வங்க தேசத்தில் இருந்து தொழிலுக் காக கொல்கத்தாவுக்கு வந்துள்ள னர். அப்போது, அங்குள்ள தரகர் மூலம் முகமது கமால்கான் 4 ஆண்டு களுக்கு முன்பு திருப்பூர் வந்துள் ளார். பின்னர், கொல்கத்தாவில் இருந்த நண்பர் ரசாத்கானையும் அழைத்துள்ளார்.

கொல்கத்தா மாநிலத்தவர்கள் போல் காண்பித்து, இந்திய பாஸ் போர்ட்டை எடுத்துள்ளனர். இது குறித்து காங்கயம் போலீஸார் வழக்கு பதிந்து, இருவரையும் கைது செய்து, சென்னை புழல் சிறை யில் நேற்று அடைத்தனர் என்ற னர். போலீஸார் கூறும்போது, “மேற்குவங்க மாநிலத்தின் வழி யாக வங்கதேசத்தினர் ஏராள மாக கொல்கத்தா வந்தடைகின்ற னர். அவர்கள் அங்குள்ள தரகர் களுக்கு பணம் கொடுத்து, திருப் பூர் வருவது தொடர்கதையாகிறது. நிறுவனங்களும் தொழிலாளர்கள் கிடைத்தால் போதும் என்ற மன நிலையில் இருப்பதால், இதனை கட்டுப்படுத்த முடியவில்லை. பாஸ் போர்ட் தயாரித்து கொடுத்த நபர் பற்றி விசாரிக்கிறோம்” என்றனர்.