தேவைக்கு ஏற்­ற­வாறு “19” திருத்­தப்­படும்! -ல­க்ஷ்மன் யாப்பா அபே­வர்­தன

234 0

நல்­லாட்சி அர­சாங்கம் ஆட்­சி­ய­மைத்த காலத்தில் இருந்து அரச ஊழி­யர்­க­ளுக்கு எதி­ராக முன்­னெ­டுக்­கப்­பட்ட அர­சியல் பழி­வாங்கல் குறித்து  சுயா­தீன விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்கும் விசேட ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவை ஸ்தாபிக்­கு­மாறு  பிர­தமர்  மஹிந்த ராஜ­பக்ஷ  ஜனா­தி­ப­திக்கு கோரிக்கை விடுத்­துள்ளார் என்று தகவல் மற்றும் தொடர்­பாடல்  தொழில்­னுட்ப இரா­ஜாங்க அமைச்சர் ல­க்ஷமன் யாப்பா அபே­வர்­தன  தெரி­வித்தார்.

மூன்றில் இரண்டு பெரும்­பான்மை ஆத­ரவு பாரா­ளு­மன்ற தேர்­தலின் ஊடாக கிடைக்கப் பெறும். மக்­க­ளுக்கும், அரச நிர்­வாக கட்­ட­மைப்­பிற்கும் தேவை­யான விதத்தில் அர­சி­ய­ல­மைப்பின் 19வது திருத்தம் மாற்­றி­ய­மைக்­கப்­படும் எனவும்  அவர் குறிப்­பிட்டார்.

அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று இடம் பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்து கொண்டு கருத்­து­ரைக்­கை­யி­லேயே  அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.  அவர் அங்கு  மேலும் குறிப்­பி­டு­கையில்

நல்­லாட்சி அர­சாங்­கத்தில் மக்கள் மீதான சேவைக்கும், அபி­வி­ருத்­திக்கும் காட்­டிய அக்­க­றை­யினை காட்­டிலும் அரச ஊழி­யர்கள் மீது அர­சியல் பழி­வாங்­க­லுக்கு முக்­கி­யத்­துவம்  காண்­பிக்­கப்­பட்­டது. இவ்­வாறு  பழி­வாங்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு நீதி­கி­டைக்க வேண்டும்  என்­ப­துடன்  முன்­னெ­டுக்­கப்­பட வேண்­டிய விட­யங்கள் குறித்து பிர­தமர் மஹிந்த ராஜ­ப­க் ஷ­வினால்   பின்­வரும் விட­ய­தா­னங்­களை உள்­ள­டக்­கிய அமைச்­ச­ரவை  பத்­திரம் சமர்ப்­பிக்­கப்­பட்­டது.

இரா­ணு­வத்­தினர் மற்றும் பொலிஸார் அர­சியல் பழி­வாங்­க­லுக்கு உட்­பட்டு  உயர்­ப­த­விகள் வழங்க மறுக்­கப்­பட்­டமை,  நீதிக்­கட்­ட­மைப்பில் அர­சியல் செல்­வாக்கு,அர­சியல் பழி­வாங்­கலை இலக்­காகக் கொண்டு  நிறு­வ­னங்கள் ஸ்தாபிப்பு, உள்­ளிட்ட பிர­தான விட­யங்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்ட பத்­திரம் சமர்ப்­பிக்­கப்­பட்­டது.

விசேட ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­குழு சட்­டத்­திற்கு அமைய விசேட ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழு­வினை  ஸ்தாபிப்­ப­தற்கு  ஜனா­தி­ப­தி­யிடம் கோரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது, அர­சியல் பழி­வாங்­க­லுக்கு உட்­ப­டுத்­தப்­பட்ட அரச ஊழியர் தொடர்­பிலும், பொறுப்­புக்­களை தவ­றாக செயற்­ப­டுத்­தி­யர்கள் தொடர்­பிலும் சட்ட நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வ­தற்­கான  வழி­மு­றை­களை ஏற்­ப­டுத்திக் கொடுப்­ப­தற்கு ஆணைக்­கு­ழு­விற்கு பரிந்­துரை செய்­ய­வேண்டும்.

சட்­டத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தற்கு அமைய  06 வார காலத்­திற்குள் அமு­லுக்கு வரும் வகையில் விசா­ரணை ஆணைக்­கு­ழுவை ஸ்தாபிக்க வேண்டும் என்று பிர­தமர்  முன்­வைத்த அமைச்­ச­ரவை  பத்­தி­ரத்­திற்கு அமைச்­ச­ர­வையின்  அனு­மதி ஆட்­சே­பிக்­கப்­பட்­டது.

இலஞ்ச ஊழல் ஆணைக்­குழு, நிதி குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவு(எப்.சி.ஐ. டி),உள்­ளிட்ட சிறப்பு விசா­ரணை பிரி­வு­களில் முன்­னெ­டுக்­கப்­பட்ட விசா­ர­ணைகள் தொடர்பில் ஆரா­ய­வேண்டும்.   ஆணைக்­கு­ழுவின்  விசா­ர­ணை­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டு சட்­ட­மா­திபர் திணைக்­க­ளத்தின் ஊடாக சட்ட நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்டும்.

அர­சியல் பழி­வாங்­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­படும் அரச ஊழி­யர்­க­ளுக்­கான  சட்ட நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வ­தற்கும், எதிர்­கா­லத்தில் இவ்­வா­றான  சம்­ப­வங்கள் இடம் பெறாத வகை­யிலும் இருப்­ப­தற்கு பாது­காப்பு வழி­மு­றைகள் மேற்­கொள்­வ­தற்கும்   இந்த அமைச்­ச­ரவை பத்­தி­ரத்தின் ஊடாக அனு­மதி கோரப்­பட்டுள்­ளது.

கேள்வி-:இடைக்­கால அர­சாங்­கத்­திற்கு  பொதுத்­தேர்­தலில் பெரும்­பான்மை ஆத­ரவு கிடைக்­குமா ?

பதில்-:நிச்­சயம் கிடைக்கப் பெறும் பொதுத்­தேர்­தலில் மூன்றில் இரண்டு பெரும்­பான்மை ஆத­ர­வுடன் பல­மான அர­சாங்கம் முன்­னெ­டுத்து செல்­லப்­படும்.

கேள்வி-:அர­சி­ய­ல­மைப்பின் 19வது திருத்தம், 13ஆவது திருத்தம்  ஆகி­ய­வற்றை   நீக்கும் 

முயற்­சி­யினை அர­சாங்கம் முன்­னெ­டுப்­ப­தாக குற்­றஞ்­சாட்­டப்­ப­டு­கின்­றது உண்­மையா ?

பதில்-:அர­சி­ய­ல­மைப்பின் 19 வது திருத்­தத்தில் பல்­வேறு முரண்­பா­டான  ஏற்­பா­டுகள் காணப்­ப­டு­கின்­றன. மக்­க­ளுக்கு பொருத்­த­மற்ற பாரா­ளு­மன்­றத்­தினை  கலைக்கும் அதி­காரம் கூட ஜனா­தி­ப­தி­யிடம் இருந்து பறிக்­கப்­பட்­டுள்­ளது. ஆகவே மக்­களின் தேவை­க­ளுக்­கா­கவும், சிறந்த அரச நிர்­வா­கத்­திற்­கா­கவும்  இத்­தி­ருத்தம் மீள்­ப­ரி­சீ­லனை செய்­யப்­படும்.

அர­சி­ய­ல­மைப்பின் 13வது திருத்தம்   மாகாண சபை முறை­மை­யினை ஏற்­ப­டுத்தும் வித­மாக உரு­வாக்­கப்­பட்­டது.  மாகாண சபை முறை­மை­யினை இல்­லா­தொ­ழிப்­பது சர்­வ­தேச மட்­டத்தில் தவ­றான ஒரு நிலைப்­பாட்டை தோற்­று­விக்கும்.

கடந்த காலங்­களில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பினர் தங்­களின் தனிப்­பட்ட பகை­மை­யினால் மாகாண சபை தேர்தல் தொடர்பில் எந்­நி­லை­யிலும் கருத்­து­ரைக்­க­வில்லை. மாகாண சபை தேர்­தலை விரை­வாக நடத்தும் நிலைப்­பாட்­டிலே அர­சாங்கம் உள்­ளது.

கேள்வி:- முன்னாள் அமைச்சர் சஜித் பிரே­ம­தா­ஸவை எதிர்க்­கட்சி தலை­வ­ராக பரிந்­து­ரைத்­துள்­ளமை இடைக்­கால அர­சாங்­கத்­திற்கு சவால் இல்­லையா ?

பதில்-:  எவ்­வித  தடையும் கிடை­யாது  ஐக்­கிய தேசிய கட்­சியின் பல­வீ­ன­மான அர­சாங்­கத்­தினை  ஜனா­தி­பதி தேர்­தலில் புறக்­க­ணித்த மக்கள் நிச்­சயம்  அதன் உறுப்­பி­னர்­க­ளையும் இடம் பெற­வுள்ள பொதுத்­தேர்­தலில் புறக்­க­ணிப்­பார்கள்.

கேள்வி:- சுவிஸ் தூத­ரக அதி­காரி கடத்தல் விவ­கார விசா­ர­ணைகள்  தற்­போது எந்­நி­லையில் காணப்­ப­டு­கின்­றன ?

பதில் :  கடத்­தப்­பட்­ட­தாக குறிப்பிடப்படும் விவகாரம் தூதரக இராஜதந்திர மட்டத்தில் முன்னெடுக்கப்படுகின்றது. அரசாங்கத்திற்கு அவப்பெயரினை ஏற்படுத்தும் விதமாகவே இந்த சூழ்ச்சி காணப்படுகின்றமையினால் இவ்விடயத்தை பொறுமையாக கையாள வேண்டியுள்ளது.

பாதிக்கப்பட்டதாக குறிப்பிடப்படும்  தூதரக அதிகாரி இதுவரையில்  எமது நாட்டின் பொதுசட்ட விடயங்களுக்கு அமைய எவ்வித வாக்குமூலத்தினையும், தெளிவுபடுத்தலையும் வழங்கவில்லை. ஆகவே  காலம் தாழ்த்தப்படுவதற்கான நோக்கம் மற்றும் இதன் பின்னணியில் உள்ளவர்கய் யார் என்பதையும்  பொறுமையுடன்  கண்டுப்பிடிக்க வேண்டிய சூழ்நிலை காணப்படுகின்றது என்றார்.