10 தொழிலாளர்கள் மீது குளவிக்கொட்டு

317 0

புசல்லாவை சோகம தோட்டத்தில்  தேயிலைக்கொழுந்து பறித்துக்கொண்டிருந்த நிலையில் 10 தொழிலாளர்கள் மீது குளவிகள் கொட்டியுள்ளன.

இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்கான 10 தொழிலாளர்களும் புசல்லாவை வகுகபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் இவ்வாறு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 10 தொழிலாளர்களில் 6 பேர் சிகிச்சைப் பெற்று வீடு சென்றுள்ள நிலையில், மேலும் 4 பேர் தொடர்ந்தும் சிகிச்சைபெற்று வருகின்றனர்.