யாழ் / அராலி மத்தி ஊரத்தி எனும் பகுதியில் மு இரத்தினசிங்கம் என்பவருடைய வீடு முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும்,ஆவணங்களும் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
குடும்பத்தினர் அனைவரும் உறவினர் வீட்டுக்கு சென்றிருந்த சந்தர்ப்பத்திலேயே இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.மின் ஒழுக்கு காரணமாகவே இவ் விபத்து நடந்திருக்கலாம் என்று பிரதேச மக்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர். வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


