ஈஸ்டர் தாக்குதல் – ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகின்றார் பேராயர்!

269 0

ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் கத்தோலிக்க பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை முன்னிலையாகவுள்ளார்.

இன்று(வெள்ளிக்கிழமை) நண்பகல் 2 மணிக்கு அவர் இவ்வாறு முன்னிலையாகி சாட்சியம் வழங்கவுள்ளார்.

இதன்போது அவர் ஈஸ்டர் தாக்குதல் குறித்து சாட்சியம் வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நாட்டின் சில பகுதிகளில் ஐ.எஸ் பயங்கரவாதிகளினால் மிலேச்சத்தனமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது 350 இற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் உயிரிழந்திருந்தனர்.

அத்துடன், 300 இற்கும் அதிகனமானவர்கள் காயமடைந்திருந்ததுடன், பலரும் தொடர்ச்சியாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தநிலையில் ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணமானவர்கள் அடையாளம் காணப்பட்டு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தொடர்ச்சியாகவே வலியுறுத்தி வருகின்றார்.

அண்மையில் தன்னை சந்தித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடமும் அவர் இவ்வாறு வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.