பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் முஸ்லிம்கள் பாதுகாப்பாக உள்ளனர்: முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச் தமிழக தலைவர் கருத்து

246 0

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான 6 ஆண்டுகால பாஜக ஆட்சியில் முஸ்லிம்கள் பாதுகாப்பாக உள்ளதாக முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச் அமைப்பின் தமிழக தலைவர் பாத்திமா அலி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர் களிடம் நேற்று அவர் கூறியதாவது:

பாபர் மசூதி இடிக்கப்பட்ட டிசம்பர் 6-ம் தேதியை முஸ்லிம் அமைப்புகள் ஒவ்வொரு ஆண்டும் கருப்பு தினமாக அனுசரித்து போராட்டங்களை நடத்துகின்றன. தற்போது அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதை முஸ்லிம்கள் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டார்களோ இல்லையோ, ஆனால் ஏற்றுக் கொண்டு விட்டனர்.

இந்தியாவில் முஸ்லிம்கள் அமைதியாக வாழ வேண்டும். மத்திய, மாநில அரசின் அனைத்து சலுகைகள், திட்டங்களைப் பயன் படுத்தி கல்வியில் மேம்பாடு அடைய வேண்டும். சகோதர இந்துக்களுடன் இணைந்து நாட் டின் வளர்ச்சிக்கு பாடுபட வேண் டும் என்பதே ராஷ்ட்ரீய முஸ்லிம் மஞ்ச் அமைப்பின் நோக்கமாகும்.

எனவே, டிசம்பர் 6-ம் தேதியை கருப்பு தினமாக கடைபிடிக்காமல் மதநல்லிணக்க தினமாக அனு சரிக்க வேண்டும். நமக்கு ஒற்று மையும், வளர்ச்சியும் முக்கியம். ஆனால் சில முஸ்லிம் அமைப்பு கள் தங்களின் அரசியல் ஆதாயங் களுக்காக போராட்டங்களை நடத்தி வருகின்றன.

காங்கிரஸ் கட்சி, முஸ்லிம்களை வாக்கு வங்கியாக மட்டுமே பார்த் தது. முஸ்லிம்களின் வாழ்க்கை மேம்பட வேண்டும் என்பதில் அக் கறை காட்டவில்லை. பிரதமர் நரேந் திர மோடி ஆட்சியில் முஸ்லிம்கள் பாதுகாப்பாக உள்ளனர். கடந்த 6 ஆண்டுகால பாஜக ஆட்சியில் மதக் கலவரங்கள் நடைபெறவில்லை. அங்கொன்றும், இங்கொன்றுமாக சில தாக்குதல் சம்பவங்கள் நடந்திருக்கலாம். அவை கண்டிக் கத்தக்கவை. அவற்றுக்கு காரண மானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு.

இவ்வாறு பாத்திமா அலி கூறினார்.