கடந்த அரசாங்க காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட ´வருமான வரி செலுத்தும் சட்டத்திற்கமைய மின் பொறியியலாளர்களிடம் இருந்து வரி அறவிடப்படவில்லை என மின் பவனையாளர்கள் சங்கம் கூறியுள்ளது.
இதன் மூலம் அரசாங்கத்திற்கு பாரிய நட்டம் ஏற்பட்டதாக அந்த சங்கத்தின் செயலாளர் சஞ்ஜிவ தம்மிக்க தெரிவித்துள்ளார்.
இது சம்பந்தமாக கடந்த ஏப்ரல் மாதம் பொலிஸ் நிதிக் குற்றப் பிரிவில் முறைப்பாடு செய்யதாகவும் எனினும் அது குறித்து விசாரணை நடத்தப்படவில்லை என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

