உள்ளாட்சி தேர்தல் குறித்து விவாதிக்க அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடக்கிறது: முதல்வர், துணை முதல்வர் பங்கேற்பு

202 0

உள்ளாட்சி தேர்தல் குறித்து விவாதிப்பதற்காக அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று மாலை நடைபெறுகிறது.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் வரும் 27, 30-ம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதிமுகவைப் பொறுத்தவரை கடந்த சில மாதங் களுக்கு முன்பிருந்தே உள்ளாட்சி தேர்தலுக்காக தயாராகி வருகிறது. தற்போது தேர்தல் அறிவிக்கப்பட் டுள்ள நிலையில், தேர்தல் பணி கள் குறித்து விவாதிக்க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடத்தப்படுகிறது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 5 மணிக்கு மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடத்தப்படுகிறது. முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

ஊரக உள்ளாட்சிகளில் போட்டி யிடுவோருக்கான விருப்ப மனுக் கள் அதிமுகவில் ஏற்கெனவே பெறப்பட்டு விட்டன. போட்டியிடு வோர் பட்டியலையும் அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் தயார் செய்து வைத்துள்ளனர். இன்றைய கூட்டத்தில் இந்த பட்டியலுக்கு ஒப்புதல் பெறப்படும் எனத் தெரிகிறது.

மேலும், தேர்தல் பொறுப்பாளர் கள் நியமனம் உள்ளிட்டவையும் இன்று இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்பட உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் விரைவில் அறிவிக்கப் படும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்து இருந் தது. இதுகுறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என கூறப் படுகிறது.