உடவளவ நீர்த்தேக்கத்தின் அனைத்து வான் கதவுகளும் இன்று (05.12.2019) ஒரு அடி வரை திறக்கப்பட்டுள்ளது.
இதனால், உடவளவ ஆற்றினை அண்டிய தாழ்நில பிரதேசங்களில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.
உடவளவ நீர்த்தேக்கத்தின் நீர் கசிவு இன்று அதிகாலை 5 மணிக்கு 217,000 ஏக்கர் அடியை எட்டியமையால் அனைத்து வான்கதவுகளும் திறக்கப்பட்டன.
அதன்படி, தற்போது 11,500 கன அடி நீர் வளவை ஆற்றில் விடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆற்றின் நீர் நிரம்பி வழிகின்றமையால் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

