ஹட்டன் பிரதான பஸ் தரிப்பு நிலையத்தில் அதிரடிப் படையினரால் நேற்று 4ஆம் திகதியன்று மாலை 6 பேர் கைது செய்யப்பட்டு ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தவர்களிடம் இருந்து 200 கிராம் மாவா போதைப் பொருள் வைத்திருந்தமைக்கும் விற்பனை செய்ததாகச் சந்தேகிக்கப்படும் சந்தேக நபரையும் அதனைப் பயன்படுத்திய ஐவரையும் கைது செய்து ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தாக அதிரடிப் படை அதிகாரி தெரிவித்தார்.
இந்நிலையில்,சட்ட விரோதமான முறையில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாகக் கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்து இச்சுற்றிவளைப்பை மேற்கொண்டதாகவும் அதன் போதே இச்சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

