மஹிந்தவுக்கு லண்டன் சிறுவன் கடிதம்

49 0
அப்துல்லா அபுபைட் என்கிற 6 வயதுடைய லண்டன் சிறுவன், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

குறித்த கடிதத்தை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது டுவிட்டர்  வலைத்தளத்தில் இன்று (04) வெளியிட்டு பதிவென்றையும் இட்டுள்ளார்.

சூழல் பாதுகாப்பு தொடர்பில் உரிய  நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இந்த சிறுவன் தனது கடிதத்தில் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

இன்று காலையில் சிறுவனின் கடிதம் தனக்கு கிடைத்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“மூத்த தலைமுறையினராகிய நாங்கள் எங்கள் இளைஞர்களிடம் வைத்திருக்கும் பொறுப்பை இந்தக் கடிதம் நினைவூட்டியது. ஒரு நாள் உங்களை நேரில் சந்திப்பேன் என்று நம்புகிறேன்” என, பிரதமர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.