நாட்டின் கடற்கரை ஓரங்களை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிராக புதியதொரு சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என சுற்றுச்சூழல் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார்.
சட்டம் நடைமுறைப்படுத்தப்படாத நாட்டை அபிவிருத்தியடைய செய்ய முடியாது எனவும் அவர் கூறினார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

