விசேட தேவையுடையவர்கள் குறித்து கவனம் செலுத்துமாறு கோரிக்கை!

266 0

அரசியல்வாதிகள் மற்றும் அரச நிர்வாக அதிகாரிகள் நாட்டில் உள்ள விசேட தேவையுடையவர்கள் தொடர்பில் உரிய அவதானம் செலுத்தவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

எனவே, இவர்கள் தொடர்பிலும் கவனம் செலுத்துமாறு தான் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களையும் கேட்டுக்கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

விசேட தேவையுடையவர்களுக்காக கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுளள்ளார்.