நாட்டிலுள்ள பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் அனைத்து செயலாளர்களும் நாளை (04) பிற்பகல் 1.00 மணிக்கு தேர்தல் ஆணைக்குழுவில் நடைபெறும் விஷேட கூட்டத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் கூட்டம் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவின் தலைமையில் நடைபெறவுள்ளது.
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பிலும் அதனோடு தொடர்பான தேர்தல் விதிமுறைகள் தொடர்பிலும் இக்கூட்டத்தில் கூடிய கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

