காலநிலையால் சாதாரண தர பரீட்சைக்கு பாதிப்பில்லை – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்

205 0

நாட்டில் சீரற்ற காலநிலை நிலவுகின்ற போதிலும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகள் எவ்வித இடையூறுகளும் இன்றி ஆரம்பமானதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி.சனத் பூஜித தெரிவித்தார். 

 

கடும் மழையால் வெள்ளம் மற்றும் மண்சரிவினால் நாட்டின் பல பிரதேங்களில் போக்குவரத்து பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் இம்முறை பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகள் அசௌகரியங்களுக்கு உள்ளாகக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும் அவ்வாறு எதுவும் நடைபெறாமல் பரீட்சைகள் ஆரம்பமாகியுள்ளதாகவும் ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

இம்முறை நாடளாவிய ரீதியில் 574 பரீட்சை ஒருங்கிணைப்பு நிலையங்களும், 4987 பரீட்சை நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளதோடு, 4 இலட்சத்து 333 ஆயிரத்து 50 பாடசாலை மூலமான பரீட்சார்த்திகளும், 2 இலட்சத்து 83 ஆயிரத்து 958 தனியார் பரீட்சாத்திகளும் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.