பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் மக்களுக்கான சேவைகளை தொடருவோம்-திகாம்பரம்

285 0

நடை­பெ­ற­வுள்ள பாரா­ளு­மன்றத் தேர்­தலில் தமிழ் முற்­போக்கு கூட்­டணி  போட்­டி­யிட்டு வெற்றி பெற்று மீண்டும் அமைச்­சர்­க­ளாக வந்து மலை­யக மக்­க­ளுக்­கான சேவையை முன்­னெ­டுப்போம் என தொழி­லாளர் தேசிய சங்­கத்தின் தலை­வரும் தமிழ் முற்­போக்கு கூட்­டணியின் பிரதித் தலை­வரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான பி.திகாம்பரம் தெரி­வித்தார்.

தொழி­லாளர் தேசிய சங்­கத்தின் ஸ்தாபகத் தலைவர் அமரர் வீ.கே.வெள்­ளை­யனின் 48 ஆவது சிரார்த்த தின நினைவுப் பேருரை நிகழ்வு நேற்று (01) அட்டன் டி.கே.டபிள்யூ. கலா­சார மண்­ட­பத்தில் சங்­கத்தின் தலைவர் பி.திகாம்­பரம் தலை­மையில் நடை­பெற்­றது.

மலை­யக மக்கள் முன்­னணியின் தலை­வரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான வீ.இரா­தா­கி­ருஸ்ணன், பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம். தில­கராஜ், மத்­திய மாகாண சபையின் முன்னாள் உறுப்­பி­னர்களான எம்.உத­ய­குமார், சோ.ஸ்ரீதரன், எம்.ராம் மற்றும் பொதுச் செய­லாளர் எஸ். பிலிப், நிதிச் செய­லாளர் எஸ்.செபஸ்­டியன், ஆலோ­சகர் வீ.புத்­தி­ர­சி­கா­மணி, அட்டன் நகரசபை உறுப்­பினரான அழ­க­முத்து நந்­த­குமார் உட்­பட பலர் கலந்து கொண்­டார்கள்.

தொழி­லாளர் தேசிய சங்­கத்தின் தலைவர் திகாம்­பரம் அங்கு தொடர்ந்தும் பேசு­கையில்,

தோட்டத் தொழி­லா­ளர்­களின் வாழ்வில் மறு­ம­லர்ச்­சியை ஏற்­ப­டுத்த வேண்டும் என்று கனவு கண்ட அமரர் வெள்­ளையன் உரு­வாக்­கிய கட்­சியில் தலை­வ­ராக இருப்­பதில் நான் பெருமை கொள்­கின்றேன். தோட்ட மக்கள் காணி,  வீட்டு உரிமை பெற்­ற­வர்­க­ளாக மாற வேண்டும் என்­பதே அமரர் வெள்­ளை­யனின் இலட்­சி­ய­மாக இருந்­தது. நான் கடந்த நான்கரை வரு­டங்­க­ளாக அமைச்­ச­ராக பதவி வகித்த போது எமது மக்­க­ளுக்கு சொந்த நிலத்தில் தனி வீடு­களைக் கட்டிக் கொடுத்து அவற்றை கிரா­மங்­க­ளாக மாற்­றி­ய­தோடு, அர­சியல் ரீதியில் பிர­தேச சபைகள், பிர­தேச செய­ல­கங்­களை அதி­க­ரித்ததுடன் பிர­தேச சபை சட்­டத்தில் திருத்­தத்தைக் கொண்டு வந்து மலை­ய­கத்­துக்­கான தனி­யான அதி­கார சபையை உரு­வாக்­கிய பல அர்த்­த­முள்ள சேவை­களை செய்து விட்­டுத்தான் அமைச்சுப் பதவியை கைய­ளித்து விடை பெற்­றுள்ளேன்.

எனவேதான் தமிழ் முற்­போக்கு கூட்­டணி விடுத்த வேண்­டு­கோளை ஏற்று ஜனா­தி­பதித் தேர்­தலில் சஜித் பிரே­ம­தா­சவுக்கு நுவ­ரெ­லியா மாவட்ட மக்கள் வாக்­க­ளித்­தார்கள். எனினும், சஜித் தோல்வி கண்டார். ஆனால், எமது மக்­களோ அல்லது தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியோ தொழி­லாளர் தேசிய சங்­கமோ தோல்­வி­ய­டை­ய­வில்லை. ஒரு இலட்­சத்­துக்கும் அதி­க­மான வாக்­கு­களை அளித்து புதிய ஜன­நா­யக முன்­ன­ணியை அமோக வெற்றி பெறச் செய்­துள்­ளார்கள்.

அவர்­க­ளுக்கு நன்­றியை தெரி­வித்துக் கொள்­கிறேன். 2015ஆம் ஆண்டில் மலை­ய­கத்தில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக மக்­க­ளிடம் வாக்­கு­களைக் கேட்டோம். அவர்­களும் நம்­பிக்கை வைத்து வாக்­க­ளித்­தி­ருந்­தார்கள். அவர்­க­ளுக்கு வாக்கு கொடுத்­தது போல நாம் அவற்றை நிறை­வேற்றிக் காட்­டினோம். இந்­திய அர­சாங்­கத்தின் 4000 வீடு­களைக் கட்டி முடித்­துள்­ள­தோடு மேலும் 10 ஆயிரம் வீடு­களில் 5ஆயிரம் வீடு­களைக் கட்­டு­வ­தற்­கான காணி­யையும் அடை­யாளம் கண்­டி­ருந்தோம்.

நாம் இன்று அமைச்சுப் பத­வியில் இல்­லா­விட்­டாலும் மக்­க­ளுக்குத் தேவை­யான அபி­வி­ருத்திப் பணி­களை செய்து காட்­டி­யுள்ளோம். எதிர் ­கா­லத்­துக்குத் தேவை­யான அடிப்­படை அதி­கா­ரங்­க­ளையும் பெற்றுக் கொடுத்­துள் ளோம். அவற்றை தொடர்ந்து முன்­னெ­டுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்­கின்றோம். நாம் ஆரம்­பித்த நல்ல திட்­டங்­களை பூர­ணப்­ப­டுத்தி மக்­க­ளுக்கு கைய­ளிக்க வேண்டும்.

நாம் தொழி­லா­ளர்­க­ளுக்கு வழங்­கு­வ­தற்­காக நோர்வூட் மைதா­னத்தில் 8ஆயிரம் கூரைத் தக­டுகளை வைத்­தி­ருந்தோம். ஜனா­தி­பதித் தேர்தல் அறி­விக்­கப்­பட்­டதால் அவற்றை மக்­க­ளுக்கு வழங்க முடி­யாமல் போய் விட்­டது. இப்­போது அவற்றை மக்­க­ளுக்கு வழங்க நட­வ­டிக்கை எடுப்­பார்கள் அவர்­களின் ஆசை வார்த்­தையில் மக்கள் ஏமாந்து விடக் கூடாது.

நான் அமைச்­ச­ராக இருந்த போது எமது மக்­க­ளுக்காக “புதிய கிரா­மங்கள்” அமைச்சை கேட்டு வாங்­கி­யி­ருந்தேன். இப்­போது மீண்டும் பழைய தோட்ட உட்­கட்­ட­மைப்பு அமைச்­சுதான் கிடைத்­துள்­ளது. நான் தலா ஏழு பேர்ச் காணியில் 10 இலட்சம் ரூபா செலவில் வீடு­களைக் கட்டிக் கொடுத்த போது விமர்­சனம் செய்­த­வர்கள் அது போதாது என்றும் தாங்கள் பத­விக்கு வரும் போது 20 பேர்ச் காணியில் 20 இலட்சம் ரூபா செலவில் வீடு­களைக் கட்டிக் கொடுக்கப் போவ­தா­கவும் பிர­சாரம் செய்­தார்கள். இப்­போது அவர்­க­ளுக்கு அமைச்சுப் பத­வியும் கிடைத்­துள்­ளது.

நான் செய்து கொடுத்­ததை விட இரண்டு மடங்கு செய்து கொடுத்தால் அதில் நான் இரட்­டிப்பு மகிழ்ச்சி கொள்பவனாகத்தான் நான் இருப்பேன். நல்ல விட­யங்கள் செய்யும் போது நிச்­சயம் வாழ்த்­துவேன். எமது சமூ­கத்­துக்கு தேவை­யா­னதை செய்யத் தவ­றினால் தட்டிக் கேட்­கவும் தயங்க மாட்டேன்.

முன்னாள் அமைச்சர் ஒருவர் தொலைக்­காட்சி நிகழ்ச்சி ஒன்றில் எமது மக்­களை இழிவு படுத்தி பேசி­ய­தற்­காக தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் எமது தலைவர் மனோ கணேசன் தகுந்த பாடத்தைப் புகட்­டி­யி­ருந்தார். என்னைப் போன்­ற­வர்கள் அந்த இடத்­தில் அந்த சந்­தர்ப்­பத்தில் இருந்­தி­ருந்தால் நிலைமை வேறுவித­மாக மாறி­யி­ருக்கும் என்­பதை சொல்லத் தேவை­யில்லை. அதற்­காக எமது மக்­களும் அர­சி­யல்­வா­தி­களும் சமூகப் பொறுப்­போடு பல்­வேறு எதிர்ப்பு நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­ட­மைக்கு நாம் நன்றி கூற வேண்டும்.

அதே­நேரம், எமது சமூ­கத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவர் மலை­ய­கத்தில் பொறி­யி­ய­லா­ளர்கள், வைத்­தி­யர்கள் இல்லை என்று கூறி­யுள்ளார். பட்­ட­தா­ரிகள் மாத்­திரம் தான் சமூ­கத்தில் படித்­த­வர்­களா? அதி­பர்கள், ஆசி­ரி­யர்கள், கல்வி அதி­கா­ரிகள், கிரா­ம­சே­வ­கர்கள், இன்னும் பல துறை­களில் உள்­ள­வர்கள் எல்லாம் படித்­த­வர்கள் இல்­லையா? எமது சமூ­கத்தைச் சேர்ந்­த­வர்­களே எம்மை கேவலப்படுத்தும் போது, ஏனைய சமூ­கங்­களில் உள்­ள­வர்­களும் எம்மை எள்ளி நகையாடத்தானே செய்வார்கள். எமது சமூகத்தை கேவலப் படுத்தும் செயல்களை இனிமேலும் நாம் அனுமதிக்கக் கூடாது.

அடுத்து வரவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் சஜித் பிரேமதாச தலைமையில் போட்டியிட்டு நிச்சயம் வெற்றி பெறுவோம். அதைத் தொடர்ந்து மீண்டும் அமைச்சராகி மலையக மக்களுக்கான சேவையைத் தொடர்வோம். அதற்கு முன்ன தாக தோட்டம் தோட்டமாக வந்து மக்களை சந்தித்து தெளிவு படுத்தவுள்ளேன். எமது மக்கள் எதற்கும் அஞ்சத் தேவையில்லை என்றார்.