ஜனாதிபதியானதைத் தொடர்ந்து தனது முதலாவது வெளிநாட்டு விஜயமாக இந்தியாவுக்கு சென்றிருந்த ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ நேற்றிரவு நாடு திரும்பியுள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ கடந்த 28 ஆம் திகதி இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
கோத்தாபய ராஜபக்ஷ இந்த விஜயத்தில் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன், இந்திய பிரமுகர்கள் பலரையும் சந்தித்துள்ளார்.
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பீ.பி.ஜயசுந்தர, வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க, திறைசேரி செயலாளர் சஜித் ஆட்டிகல, ஜனாதிபதியின் ஆலோசகர் லலித் வீரதுங்க மற்றும் ஜனாதிபதியின் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார ஆகியோரும் ஜனாதிபதியின் இந்த விஜயத்தில் கலந்துகொண்டனர்.

