வலப்பனை மண்சரிவில் 3 பேர் பலி!

343 0

நுவரெலியா, வலப்பனை பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்னர்.

வலப்பனைப் பகுதியின் மலபத்தாவ என்ற இடத்தில் மேற்படி மண்சரிவு நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

குறித்த மண்சரிவில் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என சந்தேகித்துள்ள இராணுவத்தினர் மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.