தேர்தல் ஆணைக்குழுவில் விசேட கலந்துரையாடல், கட்சிகளுக்கு அழைப்பு

253 0

நாட்டிலுள்ள சகல அரசியல் கட்சிகளினதும் செயலாளர்களை எதிர்வரும் டிசம்பர் 4 ஆம் திகதி  காலை 10.00 மணிக்கு விசேட கலந்துரையாடல் ஒன்றுக்கு வருமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது தேர்தல் ஒழுங்குகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு சீர்திருத்தங்கள் குறித்து கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.