கட்டார் வெளிவிவகார அமைச்சர் சவுதிக்கு திடீர் விஜயம்

266 0

கட்டார் வெளிவிவகார அமைச்சர் செய்க் முஹம்மத் பின் அப்துல் ரஹ்மான் அல் தானி முன்னறிவித்தல் இன்றி சவுதி அரேபியாவுக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சவுதி – கட்டார் ஆகிய நாடுகளுக்கிடையில் ஏற்பட்டுள்ள விரிசலான உறவைப் பலப்படுத்துவது இவ்விஜயத்தின் நோக்கம் என அல்ஜெஸீரா செய்திச் சேவை சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்விஜயத்தின் போது சவுதியின் முடிக்குரிய இளவரசன் மொஹம்மட் பின் சல்மான் மற்றும் அந்நாட்டு அமைச்சர்கள் பலருடனும் சந்திப்புக்களை முன்னெடுத்துள்ளதாகவும் அச்செய்திகள் சுட்டிக்காட்டியுள்ளன.

பயங்கரவாதத்துக்கு தூண்டுதல் வழங்குவதாகவும், அடிப்படைவாதத்துக்கு அனுசர வழங்குவதாகவும் சவுதியினால் கட்டார் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.