ஜன­நா­ய­கத்தை முடக்கும் வகை­யி­லான புதிய அர­சாங்­கத்தின் செயற்­பா­டுகள் – முன்­னிலை சோஷ­லிச கட்சி

303 0

கொழும்பிலுள்ள  சுவிஸ் தூத­ர­கத்தின்  அதி­காரி­யொ­ருவர்  இனந்­தெ­ரி­யா­த­வர்­க­ளினால்  கடத்திச் செல்­லப்­பட்டு விசா­ர­ணைக்கு  உட்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்றார் என்றால்  புதிய அர­சாங்­கத்தின்   கீழ்  ஜன­நா­ய­கத்தின்  இடத்தை  புரிந்­து­கொள்­ளக்­கூ­டி­ய­தா­க­வி­ருக்கும்  என்று  தெரி­வித்த  முன்­னிலை சோஷ­லிச  கட்­சியின் ஏற்பாட்டாளர் துமிந்த  நாக­முவ  பொலி­ஸாரு­டைய  அதி­கா­ரத்தை  இரா­ணு­வத்­தி­ன­ருக்கு  வழங்கும்   அள­வுக்கு நாட்டில்  ஏற்­பட்­டுள்ள   பிரச்­சினை  என்ன எனவும்  கேள்வி  எழுப்­பினார்.

முன்­னிலை சோஷ­லிச  கட்­சியின் தலை­மை­ய­கத்தில்  நேற்று முன்­தினம்  வியா­ழக்­கி­ழமை இடம்பெற்ற  ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின்  போது அவர் கூறி­ய­தா­வது,

ஸ்ரீலங்கா  பொது­ஜன  பெர­மு­னவை  சேர்ந்தோர் நாட்­டுக்கு  பாது­காப்பு அச்­சு­றுத்தல்  காணப்­ப­டு­கின்­றது.  ஆகவே, தேசிய  பாது­காப்பை  உறு­திப்­ப­டுத்­து­வது அவ­சி­ய­மா­ன­தாகும்.  அதற்­காக  சிங்­கள  மக்கள் எமக்கு  வாக்­க­ளிக்க  வேண்டும் என  கேட்­டுக்­கொண்­டி­ருந்­தனர். கோத்தாபய­ ராஜ­ப­க் ஷவை   சுட்­டிக்­காட்டி  மக்­களை  அச்­சு­றுத்தி  புதிய  ஜன­நா­யக  முன்­ன­ணி­யினர்   வாக்­கு­களை  தம்­வ­சப்­ப­டுத்த  முயற்­சித்­தனர். ஆயினும்  தற்­போது புதிய  ஜனா­தி­ப­தி­யாக  கோத்தாபய  தெரிவு  செய்­யப்­பட்­டுள்ளார். எது எவ்­வா­றிருப்­பினும் எதிர்­வரும் பொதுத்­தேர்­த­லை மைய­மாக  கொண்டே அவர்கள்  தற்­போது தமது நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து  செல்­கின்­றனர்.

கடந்த வெள்­ளிக்­கி­ழமை புதிய  அர­சாங்­கத்தின்  முதல்  வர்த்­த­மானி  அறி­வித்தல்  வெளி­யி­டப்­பட்­டது.  அதனூடாக  பொலி­ஸாரின்  அதி­கா­ரத்தை இரா­ணு­வத்­தி­ன­ருக்கு  வழங்கும் நட­வ­டிக்கை  மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தது.   பொது­மக்கள்  பாது­காப்பு  சட்­டத்தின் பிர­காரம்  ஏதேனும் அவ­சர  பாது­காப்பு நெருக்­க­டி­யான  நிலை­மை­யி­லேயே  பொலி­ஸாரு­டைய  அதி­காரம் இரா­ணு­வத்­தி­ன­ருக்கு வழங்­கப்­படும். ஆயினும்  இப்­பொ­ழுது அவ்­வா­றான அதி­காரம் வழங்­கப்­பட்­டுள்­ளது எனின் அவ­சர கால  நிலைமை  ஏதேனும்  உண்டா?

பொலி­ஸாரு­டைய  அதி­காரம் இரா­ணு­வத்­தி­ன­ருக்கு  வழங்­கு­வதில்  என்ன  பிரச்­சினை  ஏற்­ப­டப் ­போ­கின்­றது  என  சிலர் ­கேள்வி  எழுப்­பு­கின்­றனர்.  ஈஸ்டர்  ஞாயிறு  குண்­டுத்­தாக்­கு­தல்­களை  அடுத்து  பொலி­ஸாரு­டைய  அதி­காரம் இரா­ணு­வத்­தி­ன­ருக்கும் வழங்­கப்­பட்­டது. அதன்  போது  என்ன  நேர்ந்­தது?  முன்­ன­தாக   இரா­ணு­வத்தில்    சேவை­யாற்­றிய  காலி  பகு­தியை  சேர்ந்த பாட­சாலை மாண­வியின்  தந்தையொருவர்    அவ­ரு­டைய  பிள்­ளையை  அழைத்து செல்ல  வந்த பொழுது  அங்கு இருந்த  இரா­ணுவ  உத்­தி­யோ­கத்­த­ருடன்  கருத்து முரண்­பாடு ஏற்­பட்­டது.  இதன்  போது அந்த இரா­ணுவ  வீரர்  அவர் மீது துப்­பாக்கிப்  பிர­யோகம் மேற்­கொண்டு கொலை செய்தார்.

அரச  மற்றும்   பொது­மக்கள் மத்­தியில்  ஏற்­படும்   பிரச்­சி­னைகள்  தொடர்பில்  முன்­னி­லை­யா­வ­தற்கே  பொலிஸார் உள்­ளனர்.    அதேபோல்  இரு நாடு­க­ளுக்கிடையில்  இடம் பெறும்  பிரச்­சி­னைகள்  தொடர்பில்  முன்­னி­லை­யா­வ­தற்கே   இரா­ணு­வத்­தினர் உள்­ளனர். இந்­நிலையில் பொலிஸாரின் அதி­கா­ரத்தை இரா­ணு­வத்­தி­ன­ருக்கு  வழங்­கு­வதால்  வடக்கு,  தெற்கு  என  அனைத்து பகு­தி­யிலும்  உள்ள  மக்­க­ளுக்கும் பாத­க­மான  விளை­வு­களே  ஏற்­படும்.  வெளி­நாட்டு முத­லீ­டுகள்  இன்றி அர­சாங்­கத்தை  கொண்டு  நடத்த முடி­யாது. எதிர்வரும் 15  ஆம் திக­திக்கு பின்னர்  எம்.சி.சி  உடன்­ப­டிக்­கையில்  கைச்­சாத்­தி­டு­வ­தற்­காக  அமெ­ரிக்க  தூதுவர்  காத்துக் ­கொண்­டுள்ளார்.  சீனா, இந்­தியா போன்ற  நாடுகள்  நாட்டின்  பொரு­ளா­தா­ரத்தை கொள்­ளை­ய­டிப்­ப­தற்­கு­ காத்­தி­ருக்­கின்­றன.

இதற்கு  அரசாங்கம்   உடன்படும் பட்சத்தில்  மக்கள் அவர்களின் எதிர்ப்பை   வெளிபடுத்துவர். அதனை  ஒடுக்குவதற்கு  ஏதுவாகவே  இராணுத்தினருக்கு  பொலிஸாரின் அதிகாரம்  வழங்கப்பட்டுள்ளது.   ஜனநாயகத்தை முடக்கும் வகையில்  புதிய  அரசாங்கத்தின்  செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.  ஆகவே,  அதனை  கருத்தில்  கொண்டு,   இந்நிலை வலுவடைவதை  தடுக்க அனைத்து  தொழிலாளர்  வர்க்கத்தினரும் ஒன்றிணைய  வேண்டும்.