அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர்-பந்துல

297 0

புதிய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் அனைத்தும் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் நிறைவேற்றப்படும் வரவு செலவு திட்டத்தின் ஊடாகவே நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அவ்வாறு பாராளுமன்ற தேர்தல் நடத்தப்படும் வரை தற்போது முன் வைக்கப்பட்ட அனைத்து திட்டங்களையும் மேலதிக நிதி ஒதுக்கீட்டை மேற்கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.

இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள திலங்க சுமதிபால நேற்று (29) தமது கடமைகளை பொறுப்பேற்றார்.

இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் பந்துல குணவர்தண இதனை கூறியுள்ளார்.