சஜித்தை விட ரணில் தகுதியானவர்- விக்­கி­ர­ம­பாகு கரு­ணா­ரத்ன

420 0

ஜனா­தி­பதி தோத்­த­பாய ராஜ­ப­க் ஷவின் தலை­மை­யி­லான அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­களை பார்க்­கின்ற பொழுது எதிர்­வரும் காலங்­களில் பாசி­ச­வாத ஆட்சி முறை என்றால் என்ன என்­பது தொடர்பில் மக்கள் தெரிந்து கொள்ளக் கூடி­ய­தாக இருக்கும் என்று தெரி­வித்த நவ சம­ச­மாஜ கட்­சியின் பொதுச் செய­லாளர் கலா­நிதி விக்­கி­ர­ம­பாகு கரு­ணா­ரத்ன,  எதிர்­க்கட்சி தலை­வ­ராக செயற்­ப­டு­வ­தற்கு சஜித் பிரேம­தா­சவை விட ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவே பொருத்­த­மா­னவர் என்றும்  கூறினார்.

கிரு­லப்­ப­னையில் அமைந்­துள்ள ஜன­நா­யக தேசிய அமைப்பு காரி­யா­ல­யத்தில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற்ற செய்­தி­யாளர் மாநாட்டில் இதனை தெரி­வித்த அவர் மேலும் கூறி­ய­தா­வது,

ஜனா­தி­பதி கோத்­த­பா­யவின் செயற்­பா­டு­களை பார்­க்கின்ற போது எதிர்­வரும் காலங்­களில் மக்கள் பாசி­ச­வாத ஆட்­சி­முறை என்றால் என்ன என்­ப­தை தெரிந்து கொள்ளக் கூடி­ய­தாக இருக்கும். இவ்­வா­றான நிலையில் நாட்டின் தலை­வர்கள் அனை­வரும் நியா­ய­மான ஆட்­சியை நிலை­நாட்­டு­வ­தற்­காக ஒன்­றி­ணைந்து செயற்­பட வேண்டும்.

ஐக்­கிய தேசிய கட்­சியின் தோல்­விக்கு காரணம், அதன் தலை­வர்கள் தேர்தல் பிர­சா­ரங்­களின் போது முட்டாள் தன­மாக செயற்­பட்­ட­தே­யாகும். ஆனால் பல இலட்சம் மக்கள் சஜித் பிரே­ம­தா­ச­விற்கு வாக்­க­ளித்­துள்­ளனர். அவர்­களை பாது­காக்க வேண்­டி­யது எமது பொறுப்­பாகும். இந்­நாட்டில் பல சிக்­கல்­களை எதிர்­நோக்கி வரும் சிறு­பான்­மை­யின மக்கள் மத்­தியில் எமக்கு பெரும் வர­வேற்பு கிடைக்கப் பெற்­றுள்­ளது. அவர்­களை பாது­காக்­கவும் நாம் கட­மைப்­பட்­டுள்ளோம். அவர்கள் தமக்­கான பாது­காப்பை யார் ஏற்­ப­டுத்தி கொடுப்­பார்கள் என்று எதிர்­பார்த்து இருக்­கின்­றார்கள்.

இந்­நி­லையில் தலை­வர்கள் மக்­களை கருத்திற் கொள்­ளாது தப்பிச் செல்­வது பெரும் தவ­றாகும். எதிர்­க்கட்­சித் ­த­லை­வ­ராக செயற்­ப­டக்­கூ­டிய தகுதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கே இருக்­கின்­றது. அவர் ஒரு லிபரல்வாதி என்­ப­துடன் சிறந்த கல்­வி­மானும் ஆவார். சர்­வ­தே­சத்தில் அவ­ருக்கு நல்ல பெயர் இருக்­கின்­றது.அதனால் எதிர்க்­கட்சி தலை­வ­ராக ரணில் செயற்­ப­டு­வ­தையே நாம் விரும்­பு­கின்றோம்.

சஜித் பிரேமதா­சவை பொறுத்­த­ மட்டில் அவர் தேசிய பிரச்­சி­னைகள் தொடர்­பாக சுய­க­ருத்­துக்­களை வளர்த்துக் கொள்­ள­ வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். எதிர்­வரும் காலங்­களில் அவர் சிறந்த தலை­வ­ராக செயற்­ப­டுவார் என்று நாம் எண்­ணு­கிறோம் என்றார்.