ரயிலுடன் மோதி வயோதிபர் பலி!

299 0

கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி வந்து கொண்டிருந்த ரயிலுடன் வயோதிபர் ஒருவர் மோதி நேற்று (29.11.2019) மாலை 5 மணியளவில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

உயிரிழந்த வயோதிபர்  அநாதையான நிலையில் தனிமையாக வாழ்ந்து வருவதாகவும், வழமையாக மது அருந்தி வருவதாகவும் நேற்று ரயில் வந்து கொண்டிருந்தபோது மதுபோதையில் ரயிலுடன் மோதியதாகவும் ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் முள்ளிப்பொத்தானை 4ஆம் வாய்க்கால் திஸ்ஸபுர பகுதியில் வசித்து வரும் தர்மதாஷா  (72 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் தற்பொழுது கந்தளாய் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.