கதிர்காமம், யால பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது ஒரு தொகை கஞ்சா செடிகளை பொலிஸ் விசேட படையினர் தீ வைத்து எரித்துள்ளனர்.
கால் ஏக்கர் நிலப்பரப்பில் சட்டவிரோதமாக பராமரிக்கப்பட்டு வந்த சுமார் 700 கஞ்சா செடிகளே இவ்வாறு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.
இந்த கஞ்சா பராமரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் இதுவரை கைதுசெய்யப்படாத நிலையில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

