நிஷாந்த தொடர்பாக விசாரணை மேற்கொள்ளுமாறு குற்றப்புலனாய்வு பிரிவுக்கு உத்தரவு

304 0

பிரதான பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வா அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேறியுள்ளமை தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் தலைமையகம் குற்றப்புலனாய்வு திணைக்கத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

பல்வேறு விசாரணை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த பிரதான பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வா நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தனது குடும்பத்தாருடன் நாட்டை விட்டு வெளியேறி சென்றுள்ளார்.

அவர் நேற்று பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுவிட்சர்லாந்து நோக்கி பயணமாகியுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.

இவர் புலனாய்வு பிரிவின் அதிகாரிகள், பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள், அரசாங்க அதிகாரிகள் மற்றும் பல்வேறு தரப்பட்ட அரசியர்வாதிகளுக்கு எதிராக விசாரணைகளை மேற்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த பிரதான பொலிஸ் பரிசோதகர் அவரது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளுடன் நேற்று பிற்பகல் 12.50 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து பயணித்த  WK 0065 என்ற விமானத்தின் ஊடாக சுவிட்சர்லாந்தின் சுரிவ் நோக்கி பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையிலேயே நிஷாந்த த சில்வா அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேறியுள்ளமை தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப்புலனாய்வு பிரிவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.