நிதியமைச்சின் கடமைகளைப் பொறுப்பேற்கின்றார் மஹிந்த

304 0

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நிதியமைச்சின் கடமைகளைப் இன்று (திங்கட்கிழமை) பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கான நிகழ்வு நிதி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அமைச்சரவை அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்த பலர் இன்று தமது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமைத்த இடைக்கால அமைச்சரவை நேற்று காலை பதவியேற்றது.

இந்த அமைச்சரவை  பிரதமர் உட்பட 16 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.