அரச மற்றும் இராணுவ சின்னங்களுக்கு மாத்திரமே அனுமதி

304 0

இராணுவ அலுவலகங்களில்அரச இலட்சினை மற்றும் இராணுவ சின்னங்கள் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படுவதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவுக்கு அமைய,  இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வாவின் பணிப்புரைக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, நாடு முழுவதும் உள்ள அனைத்து இராணுவ அலுவலகங்களிலும் அரச மற்றும் இராணுவ சின்னங்கள் மட்டுமே காட்சிக்கு வைக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டிலுள்ள அனைத்து இராணுவ அலுவலகங்களில் இந்த விதிமுறைகளை கடைபிடிக்குமாறு இராணுவ ஆளணி நிர்வாக பணிப்பகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.