இரு கஞ்சா தோட்டங்கள் சுற்றிவளைப்பு

320 0
ஊவா குடாஒய பொலிஸாரினால் பலஹருவ பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது ஒரு கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியுடைய கஞ்சா தோட்டங்கள் இரண்டை பொலிஸார் சுற்றி வளைத்துள்ளனர்.

விமான படையினால் வானில் இருந்து பெற்று கொண்டு புகைப்படங்கள் ஊடாக குறித்த சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அடர்ந்த காட்டிற்குள் இருந்த குறித்த தோட்டங்கள் இரண்டும் இரண்டரை ஏக்கர் மற்றும் அரை ஏக்கர் நிலப்பரப்பை கொண்டது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த கஞ்சா தோட்டத்தில் இருந்து 6 அடி உயரமான ஒரு இலட்சத்திற்கும் அதிகமான கஞ்சா செடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.