அரச உத்தியோகத்தர்களின் வெளிநாட்டுப் பயணங்கள் இரத்து

334 0

அரச உத்தியோகத்தர்களின் வெளிநாட்டுப் பயணங்கள் யாவும், மறு அறிவித்தல் வரை இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் பணிப்புரையின் கீழ், ஜனாதிபதியின்  செயலாளர் பி.பீ.  ஜயசுந்தரவினால் இது குறித்த கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.  ரத்னசிறி தெரிவித்துள்ளார்.

இதன்பிரகாரம் அமைச்சு, மாகாண மற்றும் ஆளுநர்களின் செயலாளர்களுக்கு, குறித்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.