பாதுகாப்பு பணியில் ஈடுபடும் குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட 6 நாய்கள்

364 0

சீனாவில் குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட 6 நாய்கள் பாதுகாப்பு பணியில் அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்பட்டுள்ளன. 

சீனாவின் பீஜிங் நகராட்சியின் பாதுகாப்பு குழுவில் இணைப்பதற்காக அந்நாட்டு விஞ்ஞானிகள் இரண்டு நாய்களின் மரபணுக்களை கொண்டு குளோனிங் முறையில் 6 நாய்களை உருவாக்கி உள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் பிறந்த இந்த நாய்க்குட்டிகளுக்கு தற்போது 4 மாதங்கள் வயது ஆகும் நிலையில், அவை 6 மாதங்கள் வயது கொண்ட நாய்களுக்கு உண்டான திறமையுடனும், நினைவாற்றலுடனும் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த 6 நாய்களும் இலட்சனை, கழுத்துப்பட்டி, மற்றும் சீருடை அணிவிக்கப்பட்டு பீஜிங்கில் பாதுகாப்பு பணியில் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டுள்ளது. இந்த நாய்களுக்கு கூடுதல் பயிற்சி அளித்து, அதன் மூலம் மேலும் திறமையான நாய்களை உருவாக்க விஞ்ஞானிகள் திட்டுமிட்டுள்ளனர்.