தேர்தலை தொடர்ந்து விசமிகளால் அழிக்கப்படும் தமிழ் பெயர் பலகைகள்!

313 0

ஜனாதிபதித் தேர்தலை தொடர்ந்து பாணந்துறை மற்றும் கரவலப்பிட்டிய பகுதிகளில் உள்ள சில தமிழ் பெயர் பலகைகள் அடையாளம் தெரியாத விசமிகளால் அழிக்கப்பட்டுள்ளது.

நடை­பெற்று முடிந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் பிர­தான இரு வேட்­பாளர்­களும் பெற்­றுக்­கொண்ட வாக்­கு­களை பிர­தே­ச­வா­ரி­யாக நோக்கும் போது சிறு­பான்­மை­யின தமிழ், முஸ்லிம் மக்­களில் பெரு­மள­வானோர் புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் வேட்­பாளர் சஜித் பிரேம­தாச­விற்கே வாக்­க­ளித்­தி­ருந்­தனர்.

எனினும் பெரும்­பான்­மை­யி­னத்­த­வர்­களின் பெரு­ம­ள­வான வாக்குகளைப் பெற்று ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் வேட்­பாளர் கோத்­தாபய ராஜ­பக்ஷ தேர்­தலில் வெற்­றி­பெற்று, நாட்டின் ஜனா­தி­ப­தி­யாகப் பத­வி­யேற்றுக் கொண்டார்.

அத­னை­ய­டுத்து சில பிர­தே­சங்­க­ளிலும், குறிப்­பாக சமூ­க­வ­லைத்­த­ளங்­க­ளிலும் சிறு­பான்­மை­யி­னத்­த­வர்­களை அச்­சு­றுத்தும் வகை­யி­லான சம்பவங்­களும் பதி­வா­கி­யி­ருந்­தன.

அவற்றின் தொடர்ச்­சி­யாக பிரதேசமொன்றில் பாணந்துரை மற்றும் கரவலப்பிட்டிய பகுதிகளில் தமிழ், சிங்­கள மற்றும் ஆங்­கிலப் பெயர்ப்­ப­ல­கை­களில் தமிழ் பெயர்ப்­ப­லகை மாத்­திரம் அகற்­றப்­பட்­டி­ருக்­கிறது.

இந் நிலையில் தமிழ் பெயர்ப்­ப­லகை அகற்­றப்­பட்­டி­ருக்கும் புகைப்­ப­டங்­களை தனது டுவிட்டர் பக்­கத்தில் மங்­கள சம­ர­வீர பதி­வேற்றம் செய்­தி­ருக்­கின்றார்.

அத்­தோடு, ‘தேர்தல்  முடி­வ­டைந்து ஒரு­வாரம் கடந்­தி­ருக்கும் நிலையில் மீண்டும் பெரும்­பான்­மை ­வா­தத்தின் அழுக்­கான முகம் வெளிப்­பட ஆரம்­பித்­தி­ருக்­கி­றது. தமிழில் காணப்­பட்ட வீதி­களின் பெயர்கள் அகற்­றப்­பட்­டி­ருக்­கின்­றன. ஜனா­தி­பதி அவர்­களே, இது­கு­றித்த உங்­க­ளு­டைய பிர­தி­ப­லிப்­பிற்­காக நாடு காத்­துக் ­கொண்­டி­ருக்­கி­றது என்றும் பதி­விட்டி­ருக்­கிறார்.