சட்டவிரோதமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட பெண்ணொருவர் உள்ளிட்ட 5 பேர் பலாங்கொடை, வேவெல்வத்த பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
வேவெல்வத்த பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றின் அடைப்படையில் கல்கந்துர பிரதேசத்தில் வீடொன்றை சோதனைக்கு உட்படுத்திய போது, ஐஸ், கேரள கஞ்சா மற்றும் ஹசீஸ் போதைப்பொருட்களுடன் இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்ணின் தோழியொருவரின் வீட்டில் நீண்ட காலமாக இந்த போதைப்பொருள் வியாபாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், களனி மற்றும் இரத்தினபுரி பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் இரத்தினபுரி நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ள நிலையில், வேவெல்வத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

