ரணில் – சஜித் ஆகியோரில் ரணிலின் STF பாதுகாப்பு நீக்கம்

356 0

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, முன்னாள் அமைச்சர்களான மலிக் சமரவிக்ரம, திலக் மாரப்பன ஆகியோருக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பும் நீக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இருப்பினும், ஜனாதிபதி வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான சஜித் பிரேமதாசவுக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு இன்னும் அவ்வாறே காணப்படுவதாகவும் கூறப்படுகின்றது.