புத்தல – வெல்லவாய வீதியின் 6 ஆம் கட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 12 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.
புத்தல நோக்கி பயணித்த மிதிவண்டியொன்று லொறியொன்றில் மோதி முன்னால் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்றில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மற்றும் மிதிவண்டி செலுத்துனரும் புத்தல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மிதிவண்டி செலுத்துனர் உயிரிழந்துள்ளார்.
புத்தல பிரதேசத்தை சேர்ந்த 12 வயதுடைய சிறுவன் ஒருவனே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தினை ஏற்படுத்திய லொறியின் சாரதி தப்பிச் சென்றுள்ள நிலையில், அவரை கைது செய்வதற்காக புத்தல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

