கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவினருக்கு இன்று கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கொம்பனித்தெரு பிரதேசத்தில் 2 கிராம் 468 மில்லிகிராம் ஹெரோயின் போதை பொருளை தன்வசம் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்தது.
கொழும்பு 2 ஐ சேர்ந்த 38 வயதுடைய சந்தேக நபரே இதன் போது கைதுசெய்யபப்ட்டுளளார். சந்தேக நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொம்பனித்தெரு பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை மோதர பொலிஸ் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 10 கிராம் 100 மில்லிகிராம் மற்றும் 2கிராம் 300 மில்லிகிராம் ஹெரோயின் போதை பொருட்களை தம்வசம் வைத்திருந்த சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்தது.
கொழும்பு 14 ஐ சேர்ந்த 39 வயதுடைய மற்றும் 35 வயதுடைய இரு சந்தேக நபர்களே இதன் போது கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை மோதர பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

