புதிய அமைச்சர்களிடம் ஜனாதிபதியின் வேண்டுகோள்

289 0

கடந்த அரசாங்கத்தைப் போன்றல்லாமல் இராஜாங்க அமைச்சர்களுக்கும் அவர்களது கடமைகளை நிறைவேற்ற வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ நியனம் பெற்ற புதிய அமைச்சர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்துடன் இராஜாங்க அமைச்சர்களை தெரிவு செய்வதற்கு நியமிக்கப்படும் தெரிவுக்குழுவில் பரிந்துரைக்கப்படுபவர்களில் பொறுத்தமானவர்களே இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்படுவர்கள் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற அமைச்சரவை நியமனங்களை தொடர்ந்து உரையாற்றும்போதே ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறினார்.