பாணின் விலை ஐந்து ரூபாவினால் விலை குறைப்பு: உடன் அமுலில்..!

202 0

உடன் அமுலிற்கு வரும் வகையில், 450 கிராம் நிறையுடைய ஒரு இராத்தல் பாணின் விலை ஐந்து ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.நேற்று நள்ளிரவு(20.11.2019) முதல் 450 கிராம் பாண் ஒன்றின் விலையானது 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இன்று(21.11.2019) மறுபடியும் , 450 கிராம் நிறையடைய ஒரு இராத்தல் பாணின் விலை 5 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.