கட்டுத் துப்பாக்கிக்குச் சூட்டுக்கு இலக்கான குடும்பஸ்தர் வைத்தியசாலையில் அனுமதி

202 0

வாகரை தட்டு முனை ஆற்றில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்ட குடும்பஸ்தர் ஒருவர் கட்டுத் துப்பாக்கியின் வெடிக்கு இலக்காகிக் காயமடைந்த நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சின்னத்தட்டுமுனை – வாகரையைச் சேர்ந்த  37 வயதான  க.காளிதாஸ் என்பவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.

 

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் தமது நண்பருடன் வழமை போன்று மீன்பிடிக்கத் தோணியில் நின்ற போது 3 பேர்கள் ஆற்றுக்குள் சென்று கையிலிருந்த கட்டுத் துப்பாக்கியால் சுட்டு விட்டுத் தப்பிச் சென்றதாகவும் அவர்களில் இருவரை தம்மால் அடையாளம் காட்ட முடியும் என பொலிஸ் முறைப்பாட்டில் பாதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அவர்கள் மது போதையிலிருந்ததாகவும் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர் எந்த கட்சியுடனும் தொடர்பற்றவர் என்றும் குறித்த சம்பவம் தொடர்பாக வாகரை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.