எதிர்வரும் டிசம்பர் 02 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையை முன்னிட்டு நேபாளத்தின் காத்மண்டு நகரில் விசேட பரீட்சை நிலையமொன்றை அமைப்பதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இந்த வருடம் க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் 07 பேர், நேபாளத்தின் காத்மண்டு நகரில் இடம்பெறும் தெற்கு ஆசியா விளையாட்டு விழாவில் கலந்து கொள்வதன் காரணமாக இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் டிசம்பர் 02 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதிவரை இடம்பெறவுள்ள க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைக்காக 4,987 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.
அத்தோடு, இப்பரீட்சைக்கு 717,008 மாணவர்கள் தோற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

