கோதுமை மாவின் விலையை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்க பிறிமா நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இதன்படி ஒரு கிலோ கிராம் பிறிமா கோதுமை மாவின் விலையை 8 ரூபா 50 சதத்தால் அதிகரிக்க குறித்த நிறுவனம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த அறிவிப்பை, பிறிமா நிறுவனம் தமக்கு வழங்கி இருப்பதாக, விநியோகஸ்த்தர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இன்று நள்ளிரவு முதல் வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் என வெதுப்பக உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

