சாதாரண தரப் பரீட்சை – ஆட்பதிவு திணைக்கள ஆவணத்தையும் சமர்ப்பிக்கலாம்

316 0

இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்காக தற்காலிக அடையாள அட்டையை வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் மாதம் 2ம் திகதி முதல் 12ம் திகதி வரை நாடு பூராகவும் உள்ள 4 ஆயிரத்து 987 பரீட்சை மத்திய நிலையங்களில் இடம்பெறும். இம்முறை 7 இலட்சத்து 17 ஆயிரத்து 8 பேர் இந்தப் பரீட்சைக்குத் தோற்ற உள்ளனர்.

பரீட்சைக்குத் தோற்றும் போது தமது அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக பரீட்சை அனுமதி அட்டையுடன், தேசிய அடையாள அட்டையை அல்லது செல்லுபடியாகும் வெளிநாட்டுக் கடவுச்சீட்டை அல்லது சாரதி அனுமதிப்பத்திரத்தை சமர்ப்பிக்க வேண்டும். முறையான அடையாள அட்டை இல்லாத பரீட்சார்த்திகள் ஆட்பதிவு திணைக்கள ஆணையாளரினால் புகைப்படத்துடன் கூடிய தனிப்பட்ட தரவுகளைக் கொண்ட எழுத்து மூல ஆவணத்தையும் இதற்காகப் பயன்படுத்த முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்தார்.