பிரான்ஸ் இராஜாங்க அமைச்சர் – மங்கள சந்திப்பு

283 0

mankalafrபிரான்ஸ் நாட்டின் நடுத்தர வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சர் மார்டின் பின்வில், ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பு நேற்றைய தினம் கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது.

கடந்த 2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் பிரான்ஸ் நாட்டு அரச பிரதிநிதி ஸ்ரீலங்காவிற்கு விஜயம் செய்யும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ஸ்ரீலங்காவிற்கும், பிரான்ஸிற்கும் இடையில் காணப்படுகின்ற நீண்டகால இருதரப்பு அரசியல் உறவு மற்றும் வர்த்தக தொடர்புகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ளும் முகமாக அந்நாட்டு வர்த்தக இராஜாங்க அமைச்சர் கொழும்புக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இந்த நிலையில் நேற்றைய சந்திப்பின்போது வர்த்தக ரீதியிலான முக்கிய அம்சங்கள் ஆராயப்பட்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சு மேலும் கூறியுள்ளது.