உறுதிமொழிகளை பதவி காலம் நிறைவடைய முன் நிறைவேற்றுவாராம்!

393 0

நாட்டின் பிரதான துறையான அரச நிர்வாகம் இன்று முறையற்ற செயற்பாடுகளினால் பலவீனமடைந்துள்ளது. பெயரளவில்  அல்லாத சிறந்த  அரச நிர்வாக சேவையினை மக்களுக்கு பெற்றுக் கொடுப்பேன்.

தேர்தல் கொள்கை பிரகடனத்தில் குறிப்பிட்டுள்ள அனைத்து விடயங்களையும்  பதவி காலம் நிறைவடைய முன் நிறைவேற்றுவேன் .

சுதந்திரமாக  வாழும்  சூழலை எமது ஆட்சியில் மாத்திரமே உறுதிப்படுத்த முடியும் என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

மாத்தறை நகரில் இன்று தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அரச நிர்வாகம் முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. இன்று  பலவீனமான  நிர்வாகமே காணப்படுகின்றது. இந்நிலைமையினை மாற்றியமைக்க வேண்டும்.

மனித வளத்திற்கு முன்னுரிமையினை தேர்தல் கொள்கை பிரகடனத்தில் உள்ளடக்கியுள்ளோம்.

பரீட்சையினை மாத்திரம் இலக்காக் கொண்டுள்ள கல்வி முறைமையினை  இரத்து செய்வேன். இந்த கல்வி முறைமையினாலே இன்று  மாணவர்கள்  பல நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ளார்கள்.  பாரம்பரியமான  கல்வி முறைமைகள் அனைத்தும் மாற்றியமைக்கப்படும்.

உயர்தர பரீட்சைக்கு தோற்றும் அனைத்து மாணவர்களும் பல்கலைக்கழகம் செல்வதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுப்பேன்.

இதற்காக  முதல் காலாண்டில் அதிக நிதி முதலீடு செய்யப்படும். பொருளாதரத்திற்கும், இலகுவான தொழில்வாய்ப்பினையும் பெற்றுக் கொள்ளும்  நவீன கல்விமுறைமை அறிமுகப்படுத்தப்படும்.

மக்களின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டே தேர்தல் கொள்கை பிரகடனத்தில் உள்ளடக்கியுள்ளேன்.

இவையனைத்தினையும் இலகுவான முறையில் நிறைவேற்ற முடியும்.

தேர்தல் பிரச்சார மேடைகளில் இதுவரையில் குறிப்பிட்ட அனைத்து வாக்குறுதிகளையும் ஜனாதிபதியாக பதவியேற்ற காலத்தில் இருந்து பதவி நிறைவுறு  காலத்திற்குள் எவ்வித குறைப்பாடுகளும் இன்றி நிறைவேற்றுவேன்.

பாரம்பரியமான விவசாய முறைமைக்கு ஒருபோதும் கடந்த அரசாங்கம் 2ம் நிலையினை  வழங்கவில்லை. 2015ம் ஆண்டுக்கு பிறகு தேசிய உற்பத்திகள் பாரிய வீழ்ச்சியடைந்துள்ளது.

இதற்கு  பல தரப்பினரது சுயநல முன்னேற்றங்களே  பிரதான காரணியாக காணப்படுகின்றது. வீழச்சியடைந்துள்ள  விவசாயம் முன்னேற்றமடைவதற்கான அனைத்து வசதிகளையும் அரசாங்கள் குறுகிய காலத்திற்குள் முன்னெடுக்கும் என அவர் இதன்போது தெரிவித்தார்.