எங்கே எங்கே எங்கள் உறவுகள் எங்கே?

957 0

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைப்போர் நிறைவடைந்து பத்து வருடங்கள் கடந்து விட்டன. இந்த இறுதிப்போரில் காணாமல் ஆக்கப்பட்டோர் எங்கே?  யுத்தத்தின் இறுதி நாட்களில் சிறிலங்கா இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டோர் எங்கே? அந்த உறவுகளுக்கு என்ன நடந்தது? பத்து வருடங்கள் கடந்தும் அவர்கள்ள் உயிரோடு உள்ளனரா? இல்லையா? என தேடியலைந்த பெற்றோர், மனைவிமார் , குழந்தைகள், சகோதரர்கள், உறவினர்கள் நண்பர்கள் எல்லோரும் ஊர்ஊராய் சிறிலங்கா இராணுவ படை முகாம்கள், சர்வதேச செஞ்சிலுவை சங்க பணிமனைகளையும் தமது உறவுகளை தேடியலைந்து ஏமாற்றடைந்தனர்.

காணமல் போனோரின் உறவினர்கள் எல்லோரும்  ஒருங்கிணைந்து  வடக்கு கிழக்கில் கவனயீர்ப்பு போராட்டங்களை தொடர்ந்து நடாத்திக் கொண்டிருக்கிறார்கள்.

சிறிலங்கா அரசாங்கமோ அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்போ இந்த மக்களின்  துயரத்தை புரிந்து கொள்ளவும் இல்லை அவர்களுக்கான தீர்வை பெற்றுக் கொடுக்கவும் இல்லை.

தமிழ், சிங்கள அரசியல்வாதிகள் தமது அரசியல் அபிலாசைக்கு காணாமல் போனோர் விவகாரத்தை பயன்படுத்திக் கொள்வர்.

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் வருகின்ற 15 ஆம் நாள் வெள்ளிக்கிழமை (15-11-2019) ஆயிரம் நாட்களை எட்டவுள்ளது.

அன்றைய தினம் கொழும்பிலுள்ள ஜக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் அவர்களின் கவனயீர்பு போராட்டத்தை பார்வையிடவுள்ளதாக அறியமுடிகிறது.

மறு நாள் அதாவது 16 ஆம் திகதி சிறிலங்காவில் ஜனாதிபதி தேர்தல். அதில் 35 அபேட்­ச­கர்கள் போ்ட்டியிடுகின்றனர் . இதில் போலி போட்டியாளர்களும் பொழுது போக்கு போட்டி யாளர்களும் உள்ளனர். அவர்களை பற்றி நோக்க வேண்டி அவசியமில்லை.

குறிப்பாக சஜித் பிரேமதாஸ , கோத்தபாய ராஜபக்ச. , அநுர குமார திசா­நா­யக்க ஆகிய மூவரில் யார் அடுத்த ஜனாதிபதியாக வருவார் என்பதே கேள்வியா உள்ளது. அதிலும் குறிப்பாக சஜித் பிரே­ம­தாச அல்­லது கோத்­தபாய ராஜபக் ஷ இவர்­களில் ஒரு­வரே வெற்றி பெறுவர் என்று மக்­களில் பெரும்­பா­லானோர் கருத்து கணிப்பை தெரிவித்துள்ளனர்.

தேர்தெடுக்கப்படும் ஜனாதிபதி காணாமல்போன உறவுகளின் உறவுகளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?