மிலேனியம் ஒப்பந்தம் நிறுத்தப்படவில்லை- தயா கமகே

61 0

அமெரிக்காவுடன் கையெழுத்திட முன்மொழியப்பட்ட மிலேனியம் ஒப்பந்தம் திரும்பப் பெறப்படவில்லையென அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த ஒப்பந்தம், நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டு அதன் பின்னர் செயற்படுத்தப்படும் எனவும் தயாகமகே குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை மிலேனியம் ஒப்பந்தத்தில், கைச்சாத்திட வேண்டாமென இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அதேபோன்று சில கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ள போதும், இன்னும் சில கட்சிகள், குறித்த ஒப்பந்தத்துக்கு தொடர்ச்சியாக எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.